விசுவாச அறிக்கை தினமும் அறிக்கையிட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.

விசுவாச அறிக்கை தினமும் அறிக்கையிட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்

1, வாக்குதத்த வசனத்தினால் தேவனிடம் உரிமை கோருதல் :

 *என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.

(பிலிப்-4: 13)

*உலகத்தில் இருக்கிறவனைக் காட்டிலும் எனக்குள் இருக்கிறவர் பெரியவர்.

(1 யோவா-4:1)

 * உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.

(சங்-18:29) 

 *அவர் சமூகம் எனக்கு முன்பாகச் செல்லும், அவர் எனக்கு ஜெயம் கொடுப்பார்.

(யாத்தி-33:14)

 *.கர்த்தர் - உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். 

(ஏசாயா-45:2)

*திறந்த வாசலை எனக்கு முன்பாக வைத்திருக்கிறார், ஒருவனும் அதைப் பூட்டமாட்டான். (வெளி-3:8)

 * கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். (சங்-23:1) 

 *ஒடுக்கப்படுகிற எனக்கு கர்த்தர் நீதியையும், நியாயத்தையும் செய்வார். (சங்-103:5

 *எனக்கு விரோதமாக ஒரு வழியே வருகிறவர்கள் எழு வழியாக ஓடி போவார்கள்,

(உபா -28:7)

 *எனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமானாலும் அது வாய்க்காதே போம், (ஏசாயா-54; 17)

*அவர் என் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து, என் நோய்களெல்லாம் குணமாக்கினார்.

சங்கீதம் 103: 3) 

 *அவர் என் அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதித்து நோய்களை என்னைவிட்டு விலக்கினார். (யாத்-23:25)

 *இயேசுவின் தழும்புகளால் நான் சுகமானேன்.

(1 பேது-2:24)

 *கர்த்தர் என்னோடு கூட இருந்து செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். (யாத்-34 : 10}

*கர்த்தர் என் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்குவார், நான் வலது புறத்திலும், இடது புறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய், (ஏசா-54:2)

 *கர்த்தர் என்னை பெரிய ஜாதியாக்கி என்னை ஆசீர்வதித்து, என் பேரை பெருமைப்படுத்துவேன்.

*நான் ஆசீர்வாதமாக இருப்பாய். (ஆதி-12: 2)

 *நிச்சயமாகவே கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து என்னை பெருகப்பண்ணுவார்.  (எபி-6:14)

 *என் ஆத்துமா வாழ்கிறதுபோல கர்த்தர் என்னை எல்லா காரியத்திலும் வாழ்ந்து சுகமாயிருகபண்ணுவார்.

 (III யோ -2) 

*கர்த்தர் என்னை வாலாக்காமல் தலையாக்குவார், என்னை கீழாக்காமல் மேலாக்குவார். (உபா-28:14) 

*இயேசு கிறிஸ்துவின் ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகை செய்யும். (சங்-103:19)

* அவருடைய ஜனமாகிய நான், அவர் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவோன்.

(எரே-31 : 14)

 *சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய தேவன் ஏற்ற காலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

(எசா-60:22)

 * என் வெட்கத்திற்கு பதிலாக இரண்டத்தனையாய்ப் பலனைத்தருவார்.

(ஏசா-61-7)

 *பூமியின் உயர்ந்த இடங்களில் கர்த்தர் என்னை ஏறியிருக்கும்படி பண்ணி, என் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் கர்த்தர் என்னை போஷிப்பார்.

(ஏசா-58:14)

 *என் - தேவனாகிய கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவாா்

(மீகா-7: 15)

*இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே கர்த்தர் எனக்குத் துணை நிற்கிறார்.

(ஏசா-41 :14) 

 * உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன், 

2 இராஜாக்கள் 20:5

 *அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்வார். நன்மையும் கிருபையும் என்னை தொடரும்.

பிரசங்கி-3:11, சங்-23:6)

 *நான் அறியாததும், எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை கர்த்தர் எனக்கு செய்வார்.

(எரே-33 - 3)

 *கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும்.மாம்சமானயாவும் ஏகமாய் காணும் இதில் பெரிதானவைகளைக் காண்பாய்.

(ஏசா-40 : 5)

*தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை, தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர், நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது,

(லூக்கா-1:37, யோபு-42:2)

 *தேசமே பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

(யோவேல்-2:21)

 *கர்த்தர் என் போக்கையும்,  என் வரத்தையும் இது முதற் கொண்டு என்றைக்கும் காப்பார்.

(சங்-121: 8}

 *பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல கர்த்தருடைய ஆவியினாலே எல்லாம் ஆகும்

 (சகரியா-4:6)

 *கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.

(சங்-138:8) 

 *இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால், சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயிப்பேன் 

(வெளி-12:11)

 *இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

(1 கொாிந்தியா் 15=57 )

 *கன்மலையும், மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானமும் உம்முடைய சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங்கீதம்-19:14)

 *தேவனே, நீர் என் தேவன், உம்முடைய நல்ல ஆவியானவர் என்னை செம்மையான வழியிலே நடத்துவாராக. (சங்-143:10)

 *தேவரீர் எழுந்தருளுவீராக சத்துருக்கள் சிதறுண்டு போவார்களாக. (சங்-68:1)

 * கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார், அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை, நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். (உபாகமம் 31:8) 

 * கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 

(2 தெசலோனிக்கேயர் 3:3) 

 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். 1பேது2:24,

 2, விசுவாச அறிக்கை:

கர்த்தர் என் மேய்ப்பர். என் தேவைகளை அவரே சந்திக்கிறார். அவர் வசனம் என் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது; நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். என்னை அவர் வாலாக்காமல் தலையாக்குவார்.உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனை களுக்குள்ளே சுகமும் இருப்பதாக. நான் விரும்புகிறதற்கும் வேண்டிக் கொள்கிறதற் கும் மேலாய்ச் செய்கிற தேவன் அவரே! என் வாழ்க்கையின் மேன்மையே அவரின் மகிமைக்கு சாட்சி கொடுக்கும். அந்த சாட்சியே ஆத்மாக்களை அவரிடம் கொண்டு சேர்க்கும். அதனால் நான் வருகையிலே வெட்கப்படப் போவதே இல்லை.

 என் .தேவைகள் சந்திக்கப்படுகின்றன; கடன் வாங்குவதே இல்லை;  இன்னும் நான் வசன விசுவாசத்தில் அதிகமாய் நிலைத்திருக்க விரும்பி வேண்டுகிறேன்; என் தேவன் நான் விரும்புவதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மேலாய் கொடுக்கப் போகிறார்! என் ஆத்மா வாழ்வது போல நான் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருப்பேன்; சாட்சியாகவும் இருப்பேன்.

இரட்சகர் இயேசு கிறிஸ்து எனக்காய்ப் பிறந்தாரென்று என்றைக்கு நான் விசுவாசித்து அறிக்கையிட்டு இரட்சிப்புக்குள் வந்தேனோ அந்த நாள்தான் எனக்கு கிறிஸ்து பிறந்தநாள் அன்று முதல் நான் நீதிமானாக்கப்பட்டேன்; தேவ புத்திர ரானேன்; சாபங்கள் ஒழிந்தன; ஆபிரகாமின் ஆசீர் வாதங்களை விசுவாசித்துப் பெற்றுக் கொள்கிறேன்; கிறிஸ்துவுக்கு சாட்சியாய்ப் பகிரங்கமாய் வாழ்கிறேன் ; விசுவாசத்தோடு கூடிய வசனம் பரிசுத்த ஆவியா னவராலே வேலியாக எனக்கு இருப்பதால் என்னைப் பிசாசானவன் அசைக்கமுடியாது; 

நான் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, அந்த வார்த்தைகள் என் கண்களைவிட்டுப் பிரியாமல் காத்துக் கொள்கிறேன். அவைகளை என் இருதயத்தின் மத்தியில் வைத்திருக்கிறேன்.ஏனெனில் இதுவே என்னுடைய சரீர முழுவதற்கும்  சுகமும் ஆரோக்கியமும்.  நீதி. 4:20-22

நான் வெற்றிப் பவனி செல்வேன் ;

* ஜெபியுங்கள் ஜெயம் பெறுங்கள்..

அன்புக்கும் சமாதானத்துக்கும்  காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்  

கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்;  ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும்  காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.ஆமென்

. 2கொரி13:11,

கிருபையின் தேவனாகிய கர்த்தர் உங்களை சம்பூரணமாக ஆசீர்வதிப்பாராக ஆமென். 

 அன்புடன்  பாஸ்டா் P. பால் எபநேசா்🙏


9444193444

9345222252