எனது பாதுகாப்பு விசுவாசா அறிக்கை..
எனது பாதுகாப்பு விசுவாச அறிக்கை தினமும் அறிக்கையிட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். 

சங்கீதம் 37:5

தேவனே, நீர் என் தேவன், உம்முடைய நல்ல ஆவியானவர் என்னை செம்மையான வழியிலே நடத்துவாராக. (சங்-143:10)

*தேவரீர் எழுந்தருளுவீராக சத்துருக்கள் சிதறுண்டு போவார்களாக. (சங்-68:1)

* கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார், அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை, நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். (உபாகமம் 31:8)

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப்
பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். 

1பேது2:24,

விசுவாச அறிக்கை:

கர்த்தர் என் மேய்ப்பர். என்
தேவைகளை அவரே சந்திக்கிறார். அவர் வசனம் என் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது; நான் மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பொல்லாப்புக்குப்
பயப்படேன். 
என்னை அவர் வாலாக்காமல்
தலையாக்குவார்.
உன் அலங்கத்திற்குள்ளே
சமாதானமும், உன் அரமனை களுக்குள்ளே சுகமும்
இருப்பதாக. 
நான் விரும்புகிறதற்கும் வேண்டிக்
கொள்கிறதற்கும் மேலாய்ச் செய்கிற தேவன் அவரே! 
என் வாழ்க்கையின் மேன்மையே
அவரின் மகிமைக்கு சாட்சி கொடுக்கும். அந்த சாட்சியே ஆத்மாக்களை அவரிடம் கொண்டு சேர்க்கும். அதனால் நான் வருகையிலே வெட்கப்படப் போவதே இல்லை.

என் தேவைகள் சந்திக்கப்படுகின்றன; கடன் வாங்குவதே இல்லை; இன்னும் நான் வசன விசுவாசத்தில் அதிகமாய் நிலைத்திருக்க விரும்பி வேண்டுகிறேன்; என் தேவன் நான் விரும்புவதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மேலாய் கொடுக்கப் போகிறார்! என் ஆத்மா வாழ்வது போல நான் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருப்பேன்; சாட்சியாகவும்
இருப்பேன்.

இரட்சகர் இயேசு கிறிஸ்து எனக்காய்ப் பிறந்தாரென்று என்றைக்கு நான் விசுவாசித்து அறிக்கையிட்டு இரட்சிப்புக்குள் வந்தேனோ அந்த நாள்தான் எனக்கு கிறிஸ்து பிறந்தநாள் அன்று முதல் நான் நீதிமானாக்கப்பட்டேன்; தேவ புத்திர ரானேன்; சாபங்கள் ஒழிந்தன; ஆபிரகாமின் ஆசீர் வாதங்களை விசுவாசித்துப்பெற்றுக் கொள்கிறேன்; கிறிஸ்துவுக்கு சாட்சியாய்ப் பகிரங்கமாய் வாழ்கிறேன் ; விசுவாசத்தோடு கூடிய வசனம் பரிசுத்த ஆவியா னவராலே வேலியாக எனக்கு இருப்பதால் என்னைப் பிசாசானவன் அசைக்கமுடியாது;

நான் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, அந்த
வார்த்தைகள் என்
கண்களைவிட்டுப் பிரியாமல் காத்துக் கொள்கிறேன்.
அவைகளை என் இருதயத்தின் மத்தியில்
வைத்திருக்கிறேன்.ஏனெனில்
இதுவே என்னுடைய சரீர
முழுவதற்கும் சுகமும்
ஆரோக்கியமும்.

 நீதி. 4:20-22

நான் வெற்றிப் பவனி செல்வேன்

* ஜெபியுங்கள் ஜெயம் * பெறுங்கள்..

அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.

 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். 
 
2 நாளாகமம் 7:14

இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும். 

2 நாளாகமம் 7:15

*எனது பாதுகாப்பு..
—-—————
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான்.

(சங்கீதம் 91:1)

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடக முமாகும். (சங்கீதம் 91:4)

ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி. உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளை யிடுவார்.
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். 

(சங்கீதம் 91:10-12)

உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு. உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

 (சங்கீதம் 103:4)
 
வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.

(யாத்திராகமம் 23:20)

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர். அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவது மில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்.
 (உபாகமம் 31:8)

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர். (சங்கீதம் 46:1)

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற் குள் ஓடிச் சுகமாயிருப்பான். (நீதிமொழிகள் 18:10)

கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்
கொள்ளுவார். 
(II தெசலோனிக்கேயர் 3:3)

கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கி றார். (நாகூம் 1:7)

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். (சங்கீதம் 34:19)

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணி யம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர். (சங்கீதம் 5:12)

என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும் போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. (சங்கீதம் 94:18)

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத் தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்பு வித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

(சங்கீதம் 91:15)

பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துக் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார். (ஏசாயா 31:5

 நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளிய வனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.

(ஏசாயா 25:4)

கண்மணியைப்போல என்னைக் காத்தருளும். ...உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
(சங்கீதம் 17:8,9)

உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப் பட்டிருக்கிறது.

(மத்தேயு 10:30)

இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவது மில்லை தூங்குகிறதுமில்லை.
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.

(சங்கீதம் 121:4-8)

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந் திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

 (ஏசாயா 49:15,16

தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடா ரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறை விலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின் மேல் உயர்த்துவார். 

(சங்கீதம் 27:5)

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணி யம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர். (சங்கீதம் 5:12)

Pr.P.Paul Ebenezar 09444193444