இன்று இரவு வானில் நிகழப் போகும் அதிசயத்தைப் பார்க்கலாம்..
தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் இன்று ஆகஸ்ட் 13ம் தேதி இன்று இரவு வானில் நிகழப் போகும் அதிசயத்தைப் பார்க்கலாம் .

இன்று ஆகஸ்ட் 13ம் தேதி வானில் விண்கல் மழை பூமியின் மீது பொழிகிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு வானில் பார்க்க தவறாதீங்க. கூடவே உங்கள் குழந்தைகளுக்கும் இந்த விண்வெளி அதிசயத்தைக் காட்டி மகிழுங்கள் . 


133 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும் ஸ்விஃப்ட்-டட்டில் வால் நட்சத்திரம் அப்படி சமீபத்தில் வந்தபோது அதன் வாலிலிருந்து தூசிகளை, சிறு கற்களை விட்டு சென்றிருக்கிறது. இதன் அருகே பூமி இன்று செல்லும் நிலையில், இன்று இரவு விண்கல் மழையை நம்மால் பார்த்து ரசிக்க முடியும்.


பூமிக்கு வரும் ஆபத்து ?


வரும் 2038ம் ஆண்டு 

ஜூலை 12ம் தேதி பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் மோத 72% வாய்ப்பு இருப்பதாக நாசா மேற்கொண்ட ஆய்வில் தகவல்!


பூமியை தாக்கும் குறுங்கோள்


இது மிகப்பெரிய இயற்கை பேரிடராக இருக்கும் எனவும் இதை தடுக்கும் அளவுக்கு நாம் இன்னும் தயாராகவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது