மூத்த தமிழறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு.குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் 78வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசியக்கொடியை ஏற்றுவதற்காக வீட்டிலிருந்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை மாநகர காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் கம்பீரமாக அணிவகுத்து அழைத்து வந்தனர்.

பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறை அணிவகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறைந்த விலையில் மருந்துகள் வழங்க முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் வரும் பொங்கல் முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.


வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரிக்குள், ஏற்கனவே அறிவித்தபடி 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே அறிவித்தபடி ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளக் கூடிய வசதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி மூத்த தமிழறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த வருடத்திற்கான தகைசால் விருது பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. குமரி அனந்தன் அவர்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மீண்டும் எனது நன்றி.ஆசிரியர் ஏபி நியூஸ் 

எங்கள் வீட்டில்  இந்த வருடத்திற்கான தகைசால் விருது பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. குமரி அனந்தன்